துறையூரில் மாநில அளவிலான கபடி போட்டி
திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.தொழிலதிபர் கே என் அருண் நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையிலை வகித்தார்.
சென்னை,கோயம்புத்தூர் உள்பட தமிழகத்திலிருந்து 34 கபடி குழு விளையாட்டு வீரர்களை தொழிலதிபர் அருண் நேரு வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு இரண்டு லட்சமும் இரண்டாம் பரிசு 1,50,000 மூன்றாம் பரிசு ஒரு லட்சத்து 25 ஆயிரம் நான்காம் பரிசு ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.சிறப்பு அழைப்பாளர்களாக துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மாவட்ட பொருளாளர் தர்மன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை திருச்சி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.