மாநில பேச்சு போட்டி - அரசு பள்ளி மாணவி தேர்வு

மாநில அளவிலான பேச்சு போட்டியில் பங்கேற்க தேர்வான அழிசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி தீபாவை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.;

Update: 2024-02-25 13:36 GMT

மாணவி தீபா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் அழிசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருபவர் தீபா. இவர், இரண்டு ஆண்டுகளாக நடந்த கலை திருவிழா, இலக்கிய மன்ற செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், தொடர்ந்து முதலிடம் பிடித்து உள்ளார். கடந்தாண்டு பெருநகரில் நடந்த மன்ற செயல்பாடு பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி தீபா, மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் நடந்த காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

Advertisement

அதேபோல, கடந்த அக்டோபரில், ஒன்றிய அளவிலான கலை திருவிழா பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு இறுதியில் குன்றத்துாரில் நடந்த மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானார். கடந்த ஆண்டில், வேலுார் பொறியியல் பல்கலைக்கழகத்தில் நடந்த மாவட்ட அளவிலான கலை திருவிழா பேச்சு போட்டியில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்றார். பல்வேறு பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற தீபாவை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்."

Tags:    

Similar News