பாஜக கிளை நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய மாநில துணைத்தலைவர்
ராசிபுரம் பகுதி கிளை கழக தலைவர்கள், நிர்வாகிகள் என கட்சி பிரமுகர்கள் தொண்டர்கள் தொடர்ந்து சிறப்பாக பல்வேறு பணிகளை செய்து முடித்து தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு மிகவும் உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலத் தலைவர் அண்ணாமலை ராசிபுரம் வருகை தந்த போது நிர்வாகிகள், கிளை தலைவர்கள் சிறப்பாக பணியாற்றினர். அவர்களை பாராட்டும் விதமாகவும் கௌரவிக்கும் விதமாகவும், 30க்கும் மேற்பட்டநிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்களுக்கும் சால்வை அணிவித்து இனிப்புகள், மற்றும் வேஷ்டி, சட்டைகள் வழங்கி பாஜக மாநிலத் துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் மத்திய நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட துணை தலைவர் ஆர்.டி. இளங்கோ, நகரத் தலைவர் வேலு(எ) வேல்முருகன், மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஏ. சம்பத்குமார், அசோக் குமார், சக்தி கேந்திர பொறுப்பாளர் மற்றும் நகர பொருளாளர் ராஜா, சுற்றுச்சூழல் அணி மாநில துணைத்தலைவர் சதீஷ் ,சீனிவாசன், நகர முன்னாள் தலைவர் மணிகண்டன், கிளை தலைவர்கள் வார்டு பொறுப்பாளர் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.