விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கையிருப்பு

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-18 12:52 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் கோடவுன்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார்.

சிவகங்கை டான்பெட் கோடவுனில் இருப்பில் உள்ள உரங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள்மூலம் உரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான உரம் முன்கூட்டியே அனைத்து கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்றவர், பெறாத விவசாயிகள் அனைவருக்கும் உரம் தடையின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யூரியா 1117 டன், டி.ஏ.பி., 357 டன், பொட்டாஷ் 321 டன், காம்ப்ளக்ஸ் 632 டன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களிலும் சேர்த்து மொத்தம் யூரியா 3820 டன், டி.ஏ.பி., 751 டன், பொட்டாஷ் 571 டன், காம்ப்ளக்ஸ் 2335 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News