திருட்டு போன நகைகள், செல்போன் உரியவர்களிடம் ஒப்படைப்பு

சிசிடிவி பொருத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Update: 2023-12-15 03:12 GMT
காவல்குறை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள், சோழபுரம், பந்தநல்லுார் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கு சம்பந்தமான நிலுவையில் உள்ள 50க்கும் அதிகமான வழக்குகளை உடனடியாக விசா ரித்து தீர்வு காண சிறப்பு முகாம் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் தலைமையில் சோழபுரத்தில் நடந்தது. காவல் ஆய்வாளர்கள் ஷர்மிளா, ராஜேஷ், பாலசந்திரன், ரேகாராணி மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் பேசிய திருவிடைமருதூர் டி.எஸ்.பி ஜாபர் சித்திக், ஒவ்வொரு வீட்டிலும், கடைகளிலும் சிசிடிவி காட்சிகளை வீட்டிற்கு உள்ளே மட்டும் பொருத்தாமல், வீட்டிற்கு வெளியேயும் பொருத்தினால் தான் திருடர்கள் எந்த வழியாக தப்பி செல்கிறார்கள்.

அவர்களது அடையாளங்களை எளிதில் கண்டறியலாம். அதன்மூலம் துரிதமாக திருட்டுபோன நகை மற்றும் பொருட்களையும் மீட்க முடியும். எனவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். முகாமில் குடும்ப பிரச்னை, கொடுக்கல் வாங்கல் பிரச்னை, வாய் தகராறு, காதல் பிரச்னை, சொத்து பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. இதில் சோழபுரம் காவல்நிலையத்தில் பதிவான திருட்டு வழக்கில் ரூ 3 லட்சம் மதிப்புள்ள 7.5 பவுன் நகைகள் மற்றும் திருநீலக்குடி காவல்நிலையத்தில் பதிவான திருட்டு வழக்கில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள 11.5 பவுன் உள்ளிட்ட நகைகளை உரியவர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மாயமான 18 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News