வயிற்றில் கட்டி, கணவரிடம் தகராறு : மனமுடைந்த பெண் தற்கொலை

 குமாரபாளையத்தில் வயிற்றில் கட்டியும் , கணவரிடம் தகராறும் இருந்த நிலையில், மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-28 06:10 GMT
பைல் படம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உடையார்பேட்டை பகுதியில் வசிப்பவர்கள் கோகுல், 35, கல்பனா, 30. கூலி தொழிலாளர்கள். கல்பனாவிற்கு ஏற்கனவே வயிற்றில் கட்டி இருந்து, அதனை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்து, அது அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் அதே கட்டி வளர்ந்து, வலி அதிகம் ஆகியுள்ளது. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஆதரவும் இவர்களுக்கு இல்லை.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவது வழக்கம் என கூறப்படுகிறது. மே 20, மாலை 05:30 மணியளவில், கோகுல் நண்பர் ஆட்டோ ஓட்டுனர் சீனிவாசன் என்பவர், கோகுலிடம் போன் செய்து, கல்பனா பூச்சி மருந்து குடித்து, மயக்கம் ஏற்பட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக கூற, நேரில் சென்ற கோகுல், அவரை, டாக்டரின் ஆலோசனைப்படி, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் கல்பனா நேற்று  அதிகாலை 05:30 மணியளவில் இறந்தார்.

இது குறித்து கோகுல், கல்பனாவின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்க, ஈரோட்டில் இருக்கும் கல்பனாவின் சகோதரர் சக்திவேல், 31, நேரில் வந்து, விபரம் அறிந்து, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதில் தங்கை கல்பனா, வயிற்றில் கட்டி இருப்பதால், வலி தாங்க முடியாமல், பூச்சி மருந்து சாப்பிட்டு விட்டார். இவரது மரணத்தில் எவ்வித சந்தேகம் இல்லை என்று எழுதி கொடுத்து, விசாரணை செய்திட சொல்லி, புகார் மனு கொடுத்துள்ளார். இதன்படி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News