வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு-இரண்டு பேர் கைது

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-12-16 12:20 GMT

கைதான நபர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை:கடந்த 7ம் தேதி இரவு சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.அப்போது பீளமேடு மற்றும் வடகோவை ரயில் நிலையங்கள் இடைப்பட்ட பகுதியை ரயில் கடந்த போது மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கற்களை வீசியுள்ளனர்.இந்த சம்பவத்தில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இது தொடர்பாக கோட்ட ஆணையர் சவ்ரவ்குமார் ரயில்வே பாதுகாப்பு படை ( RPF ) உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பீளமேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியவர்கள் என்பது தெரியவந்தது.

விசரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சரவணன்(28) ஜெகதீஷ்(23) என்பதும் இருவரும் விளையாட்டாக ரயில் மீது கல் வீசியதாக ஒப்புக் கொண்டனர்.இதனையடுத்து இருவரையிம் கைது செய்த RPF அதிகாரிக குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Tags:    

Similar News