அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி - 4 பேர் கைது

அன்னவாசல் அருகே உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்குவாரியிலிருந்து அரவை கற்கள் கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-12 05:52 GMT

கல் குவாரி 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே காணத்தான் பட்டி என்ற இடத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் அனுமதி இன்றி தனியார் கல் குவாரி நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல் துணைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமேலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் கல்குவாரி அரசின் அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு கற்கள் ஏற்றியபடி நின்று இருந்த டிப்பர் லாரி கற்களை ஏற்ற பயன்படுத்தும் டோசர் கம்பரசர் இயந்திரம் மற்றும் செல்பேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்ட சித்தன்னவாசல் பழனி மகன் செல்வம் வயது 26, மன்னவேலாம்பட்டி அய்யாசாமி மகன் சிவராஜ் வயது 49, மாங்குடி அடைக்கண் மகன் பரமசிவம் வயது 35, காணத்தான்பட்டி ஆறுமுகம் மகன் நடராஜன் வயது 56 ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்தனர்.

Tags:    

Similar News