நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்
நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்; எம் எல் எ துவக்கி வைத்தார்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பீலிக்குளம், புஷ்பகிரி ஆனப்பாறை வழியாக தடம் எண் 82 ஜி என்ற அரசு பஸ் இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ராஜேஷ் குமார் எம்எல்ஏ விடம் அப்பகுதியினர் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்படி மீண்டும் அந்த பஸ்சை பஸ் இயக்க முடிவு செய்யப்பட்டு, இன்று எம். எல். எ தொடங்கி வைத்தார்.
அதேபோல பாத்திமாபுரம் சென்று வந்த தடம் எண் 82 சி அரசு பேருந்தும் பல மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்த ராஜேஷ்குமார் எம்எல்ஏ அந்த பேருந்தையும் இன்று காலை மீண்டும் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.