எஸ்டிபி கட்சியின் ஆண்டு விழா கொண்டாட்டம்

பெரியபட்டினத்தில் எஸ்டிபி கட்சியின் 16ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2024-06-21 15:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தில்  எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி தலைவர் நெல்லை முபாரக் கொடி ஏற்றினார்.   அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது,  கள்ளகுறிச்சியில் கள்ள சாராயத்திற்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் முதல் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

கஞ்சா, சாராயம் உளிட்ட போதை பொருள்கள் விற்போரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சமூக வலைதளங்கில் மத மோதலை ஏற்ப்படுத்தும் விதமாக பதிவிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பன் பகுதியில் கடலில் இறந்த சிறுவனுக்கு அரசு உடனயாக நிவாரண தொகையை வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் கட்ட அரசு ஆக்கிரமிப்பு செய்ய விவசாய நிலங்கள்  மீண்டும் வழங்க வேண்டும் என்றார்  இதில் இதில் மாவட்ட தலைவர்  ரியாஸ் கான் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News