பட்டப் பகலில் வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்து நாசம்
சங்ககிரி அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீவிபத்தில் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து சேதமானது.;
தீ விபத்து
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் மேட்டுக்கடை பகுதியில் விவசாயி பாட்டப்பன் மகன் மூர்த்தி என்பவர்க்கு சொந்தமான இடத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக சேமித்து வைக்க வைக்கோல் புல் போர் வைத்துள்ளார் இந்நிலையில் மதியம் திடீரென வைக்கோல் புல் தீ பிடித்து புகை மண்டலமாக செல்வதை சாலை வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து விவசாயி மூர்த்தி அலறியடித்து ஒடி உறவினர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ வேகமாக பரவியதால் எடப்பாடி தீயணைப்பு துறையினர்க்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் எடப்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி கிராம நிர்வாக அலுவலர் அருள்முருகன் மற்றும் தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.