அரசு மருத்துவமனையில் தெரு நாய் தொல்லை
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தெருநாய்களின் தொல்லையால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்;
Update: 2023-12-27 03:25 GMT
அரசு மருத்துவமனையில் தெரு நாய் தொல்லை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக, மருத்துவமனைக்குள் செல்ல நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே நாய்களை அப்புறபடுத்த நடவடிக்கை கோரிக்கை எழுந்துள்ளது.