தாளவாடி அருகே மானை கடித்த தெருநாய்கள்
தாளவாடி அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறிய மானை கடித்த தெருநாய்களை பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 09:23 GMT
நாய்கள் கடித்த மான்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள அருளவாடி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மானை நாய்கள் துரத்தியதால் கிராமத்திற்குள் நுழைந்தது. அப்பகுதி கிராமவாசிகள் நாய்களிடமிருந்து மானை மீட்டு வனத்துறைக்கு தகவலளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ள மானை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்குப்பின் மானை வனப்பகுதியில் விடுவிப்பதாக தகவல் தெரிவித்தனர்.