வணிக நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை

வேட்பாளர்களின் சார்பாக வணிக நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-04-17 03:19 GMT

மாவட்ட ஆட்சியர் பழனி 

 விழுப்புரம் மாவட்டத்தில், கடலூர் கோட்ட வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவின் இணை ஆணையர் தலைமையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக வணிக நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக வணிக நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்கான பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News