கரூரில் அகில இந்திய கட்டடுனர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம்

கரூரில் அகில இந்திய கட்டடுனர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடந்தது.

Update: 2024-02-27 06:59 GMT

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ,தலைமை தபால் அலுவலகம் முன்பு, அகில இந்திய கட்டடுனர்கள் சங்கம் கரூர் மையம் சார்பிலும், கரூர் மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்கம், கரூர் கட்டிட பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பாகவும், கட்டிடப் பணிக்கு தேவையான எம்சாண்ட், பி.சாண்டு, ஜல்லி மற்றும் அரலை ஆகிய கட்டுமான பொருட்களின் கடுமையான, தன்னிச்சையாக விலை ஏற்றத்தை கண்டித்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இன்று ஒரு நாள் அடையாள கட்டட வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளும், கரூர் மாவட்ட பைனான்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணி, கரூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்பசாமி, கரூர் உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் லோகநாதன், உள்ளிட்ட பல்வேறு தொழில் துறை நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் இந்த உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News