பூதலூர் வட்டாரத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக்கோரி போராட்டம்

பூதலூர் வட்டாரத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரி சிபிஎம் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-05 16:09 GMT
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விவசாயம் பொய்த்துப் போன பூதலூர் வட்டாரத்தை வறட்சிப் பகுதியாக அறிவித்து, நிவாரண பணிகளை உடன் துவங்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பூதலூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காலை கவன ஈர்ப்பு  போராட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாண்டியன், சுந்தரவடிவேல், முத்துவேல், கண்ணன், கோவிந்தராஜ்,

கருணாகரன், சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜகோபால், ராஜு, எம்.ஜி. சரவணன், சித்திரவேல்,  பழனிச்சாமி, வியாகுலதாஸ், அஞ்சலிதேவி, வசந்தா, விவசாய சங்கம் ஒன்றியத் தலைவர் கெங்கை பாலு, வடக்கு ஒன்றிய தலைவர் உதயகுமார் மற்றும் கோவிந்தராஜ்,

கண்ணன், ரமணி, பாரதி, வின்சென்ட், தங்கமணி, முத்தையா, பாலா மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியப் பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில், 'விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்க வேண்டும்.

அருகிலேயே கல்லணை இருந்தும் விவசாயம் செய்ய இயலாத நிலை உள்ளதை ஆராய்ந்து, உரிய காலத்தில் ஏரிகளுக்கு நீர் வருவதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.  பூதலூர் பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

100 நாள் வேலைக்கான சம்பள நிலுவையை, பொங்கலுக்குள் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். விவசாயத்திற்கு, தடையற்ற நீர்ப்பாசனத்திற்கு ஏதுவாக பூதலூர் பகுதிகளில் ஏரிகளை தூர்வார வேண்டும்' என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News