சிறுமி துாக்குபோட்டு தற்கொலை
கும்பகோணம் அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-18 13:01 GMT
தற்கொலை
கும்பகோணம் மாநகராட்சியை சேர்ந் தவர் 16 வயது சிறுமி. இவர் பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம்தேதி பிளஸ் 1 ரிசல்ட் வெளியானது. அதில் மாணவி குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதனால் வேதனையடைந்தவர் வீட்டில் யாருமில்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் தற்கொலை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் தகனம் செய்துள்ளனர்.
தகவலறிந்த குடந்தை டவுன்விஏஒ..சுரேந்திரகுமார், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்து கடந்த 16ம்தேதி புகார் செய்தார். போலீசார்வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.