பேருந்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த மாணவர் பலி
விழுப்புரம் அருகே பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர், அதன் டயரில் தவறி விழுந்து இறந்தார்.
Update: 2024-03-19 07:06 GMT
விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் பாலாஜி(20). இவர் விழுப்புரம் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி காலை முண்டியம்பாக்கத்திலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது சிந்தாமணி வங்கி அருகே சென்றபோது அரசு பஸ்சின் முன் படிக்கட்டில் நின்றிருந்த அவர் வேக தடையில் பஸ் ஏறியதில் நிலை தடுமாறி பாலாஜி தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின் பக்க டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து பாலாஜியின் தாயார் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் அரசு பஸ் டிரைவர் சரவணன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.