மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் - பாலஸ்தீன் போரை முடிவுக்கு கொண்டு வரக்கோரி மாணவர் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
Update: 2024-05-09 01:23 GMT
இஸ்ரேல் - பாலஸ்தீன் போரை முடிவுக்கு கொண்டு வரக்கோரி மாணவர் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் - பாலஸ்தீன் போரை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்க அரசைக் கண்டித்து, அமெரிக்காவில், போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்ததைக் கண்டித்தும், இந்திய மாணவர் சங்கம், தஞ்சாவூர் மாவட்டக்குழு சார்பாக, பனகல் கட்டடம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கு.சந்துரு, மாநில மையக்குழு உறுப்பினர் ஜி.கே.மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன், திருச்சி மாநகர் தலைவர் சூர்யா, திருச்சி புறநகர் தலைவர் வைரவளவன், திருச்சி புறநகர் மாவட்டச் செயலர் ஆமோஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினர் ஜோஸ்வா நன்றி கூறினார்.