பள்ளிக்குள் புகுந்தத பாம்பினால் மாணவர்கள் அச்சம்
கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிக்கொண்டிருப்பதை கண்டு ஓட்டம் பிடித்த மாணவர்கள்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-03 09:17 GMT
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாம்பு
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு, கை கழுவுவதற்காக சென்றபோது, குழாய் அருகில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிக்கொண்டிருப்பதை கண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) வேலுமணி தலைமையிலான வீரர்கள் பள்ளிக்கு சென்று, பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர், வனச்சரகர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.