பாக்ஸிங் செய்தபடி சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலகசாதனை

Update: 2023-12-13 03:49 GMT

உலக சாதனை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாக்சிங் செய்தபடி சிலம்பம் சுற்றி கொண்டு பாக்சிங் செய்தபடி சிலம்பம் சுற்றிக்கொண்டு 45 நிமிடத்தில் 7 கிலோ மீட்டர் தூரத்தை அரசு பள்ளி மாணவர்கள் கடந்தனர். இதற்காக உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையத்தை சேர்ந்த பூபேஷ் ராஜ் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் மற்றும் தீபக் குமார். மேலும் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் அகத்தீஸ்வரன். பாலகிருஷ்ணன் மற்றும் அகத்தீஸ்வரன் ஆகியோர் சர்கார் பெரியபாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகின்றனர். தீபக் குமார் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.  மாணவர்கள் 3 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள வீரத்தமிழன் தற்காப்பு கலை குழுவில் இணைந்து குத்துச்சண்டை மற்றும் சிலம்பம் பயிற்சி பெற்று வந்தனர்.

இந்நிலையில் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஸ்ரீதர் என்பவரின் முயற்சியால் உலக சாதனை படைக்கும் முனைப்பில் 6 வயதுடைய பாலகிருஷ்ணன்  பாக்சிங் செய்தபடியும், தீபக் குமார் மற்றும் அகத்தீஸ்வரன் ஆகிய இருவரும் சிலம்பம் சுற்றிய படியும் சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் தொடங்கி 45 நிமிடத்தில் சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளி வரை 7 கிலோமீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றிய படியும்  பாக்சிங் செய்த படியும் நடந்தே வந்தடைந்தனர்.  

அரசு பள்ளி மாணவர்களின் இந்த முயற்சி இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கிரகாம்பெல் உலக சாதனை புத்தகத்தில் புதிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 45 நிமிடத்தில் 7 கிலோமீட்டர் தூரத்தை சிலம்பம் சுற்றியபடி வந்தடைந்து புதிய சாதனை படைத்த 3 அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனையை பாராட்டி கிரகாம்பெல் உலக சாதனை புத்தகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தமயந்தி, பெற்றோர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் சாதனை படைத்த  3 பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News