விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் தர்ணா
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கள்ளுக்கடை மூலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பின்புறம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தங்கி படிக்க வசதியாக பள்ளி வளாகத்திலேயே அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பள்ளியில் படித்து வரும் 9-ம் வகுப்பு மாணவிகளான வினு, பிரியதர்ஷினி, வந் தனா, விஷ்ணுப்பிரியா, சர்மிளா, கிருத்திகா, 10- ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி, 11-ம் வகுப்பு மாணவிகளான நிரஞ்சனா, சுவாதி, ஸ்ரீமதி, வஞ்சு, வினிதா ஆகியோர் ஏழை, எளிய குடும் பத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அப்பள்ளி வளா கத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கியி ருந்து படிக்க விண்ணப்பித்தும் அவர்கள் 12 பேருக்கும் விடுதியில் இடம் கிடைக்கவில்லை. இவர்கள் தங்களை விடுதியில் சேர்க்கக்கோரி பலமுறை விடுதி காப்பாளரிடம் நேரில் சென்று முறையிட்டும் அவர்களை விடுதியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப் பட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அம்மாணவிகள் மிகவும் மனஉ ளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி நிர்வாகமோ, விடுதியில் இடம் கிடைத்தால்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்கிறது. ஆனால் விடுதி நிர்வாகம், அம்மாணவிகளை விடுதியில் சேர்க்காமல் தொடர்ந்து அலைக்க ழித்து வருகிறது. இதனால் அம்மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு அவர்கள் செய்வதறி யாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் பூவை ஆறுமுகம் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் அம்மாணவிகளை விடுதியில் சேர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் அம்மாணவிகள் தங்கள் பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர்.
திடீரென அவர்கள் அனைவரும் அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களை பள்ளி விடுதியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப் போது மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் கவனத்திற்கு இது பற்றி கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.