சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள் அணிவகுப்பு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Update: 2024-04-17 15:50 GMT

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


நாடளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி 1,200 மாணவர்கள் தேர்தல் தேதி, 100 சதவீத வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி, சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதில் சோனா கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சேலம் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகிகள், சேலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News