சதுரங்கப் போட்டியில் வீ.ஜி.விகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை
சதுரங்கப் போட்டியில் வீ.ஜி.விகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை;
By : King 24x7 Website
Update: 2023-12-05 18:18 GMT
சதுரங்கப் போட்டியில் வீ.ஜி.விகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை
சேலம் சகோதயா சார்பில் நாமக்கல் மாவட்டம் குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட சதுரங்கப் போட்டியில் 11 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசினையும், யோகா போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசினையும் வென்றனர். பரிசு பெற்ற மாணவர்களைப் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு பள்ளி நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.