குமாரபாளையத்தில்உலக தாய்மொழி தினத்தையொட்டி மாணவ மாணவிகள்  பேரணி

குமாரபாளையத்தில் உலக தாய்மொழி தினத்தையொட்டி, மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் சார்பில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற  பேரணி நடந்தது.

Update: 2024-02-22 01:40 GMT


குமாரபாளையத்தில் உலக தாய்மொழி தினத்தையொட்டி, மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் சார்பில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற  பேரணி நடந்தது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உலக தாய்மொழி தினத்தையொட்டி, மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் சார்பில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற  பேரணி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ல்  உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி  குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக் குழுவின் சார்பில் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது இதில் தனியார் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் பிரிவு மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற  பேரணி, எஸ்.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் மதிவாணன் தலைமையில்  நடந்தது.

இந்த பேரணி குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவிலிருந்து துவங்கி,  சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை மற்றும் பள்ளிபாளையம் சாலை வழியாக மொழிப்போர் தியாகங்கள் நினைவுத்தூண்  முன்பு நிறைவு பெற்றது.  இந்த ஊர்வலத்தில் தாய்மொழி குறித்து வாசகங்கள் அடங்கிய பதாதைகள்  ஏந்திய மாணவ மாணவிகள் தமிழுக்கு அமுதென்று பேர், தமிழ் எங்கள் உயிருக்கு நேர், தமிழும் தமிழ் நாடும் எங்கள் இரு கண்கள், என்ற கோஷங்கள் போட்டபடி  ஊர்வலமாக வந்தனர்.

நினைவுத் தூணிற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்மொழியின் சிறப்புக்கள் பற்றி மாணவ, மாணவியர் மற்றும் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் தலைவர் மல்லை ராமநாதன் பேசினார்கள், துணை தலைவர் அன்பழகன், தி.மு.க. மாவட்ட பொருளர் ராஜாராம், நினைவுத்தூண் செயலர் பகலவன், துணை செயலர் ரவி, பாண்டியன், மக்கள் நீதி மய்யம் சித்ரா  உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News