2024-ஐ வரவேற்ற மாணவர்கள்
சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகமும் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. பள்ளி மாணவர்களும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக செஸ்போர்டுடன் 2024 வடிவில் நின்று வரவேற்றனர்;
Update: 2024-01-01 01:04 GMT
2024-ஐ வரவேற்ற மாணவர்கள்
காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகமும் இணைந்து 2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை செஸ் போர்டு மூலம் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்கள் கையில் செஸ் போர்டுடன் 2024ம் ஆண்டு வடிவில் நின்று வரவேற்றனர். தலைமை ஆசிரியர் அண்ணாமலை தலைமையேற்றார். இதில் சதுரங்க வீரர்கள், சதுரங்க நடுவர்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.