விருத்தாசலம் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.;

Update: 2024-01-05 04:55 GMT

அமைச்சர் ஆய்வு 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. இதில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். ஆர். ராதாகிருஷ்ணனுடன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு “கல்லூரி களப்பயணம்” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவச் செல்வங்களுடன் உரையாடினார். பழமையான பாதுகாப்பற்ற கட்டடங்கள் இடிக்கும் பணி அப்பள்ளியில் நடைபெற்று வருகின்றது.

Advertisement

அப்பணியைப் பார்வையிட்டுப் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். அதே வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தையும், நமக்கு நாமே(2021-2022) திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள நூற்றாண்டு கலையரங்கத்தையும் பார்வையிட்டு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையாற்றும் இப்பள்ளியை “பாரம்பரிய பள்ளிக் கட்டடங்கள் புதுப்பித்தல்” திட்டத்தின் கீழ் கொண்டு வருமாறு பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.

Tags:    

Similar News