தருமபுரியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆய்வு கூட்டம்
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி கள் மற்றும் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூடுதல் கலெக் டர் கவுரவ்குமார் தலைமை /தாங்கினார். ஊரகவளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கோடைகாலமாக இருப்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்க ளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கதேவையான நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்கவேண்டும்.
குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடி ஆய்வு நடத்தி தடை இன்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.சீரமைக்க வேண்டும். இதேபோல் குடிநீர் வழங்கபயன்படும் மின் மோட்டார்கள், போர்வெல்கள், மேல் நிலை நீர்த்தேக்கதொட்டிகள் ஆகியவற்றில்,
ஏதேனும் பழு துகள் ஏற்பட்டால் உடனடி யாக சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறை சார்பில் நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.