தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டம் குறித்து ஆய்வு

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டம் குறித்து ஆய்வு நடந்தது.

Update: 2024-06-15 11:59 GMT

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டம் குறித்து ஆய்வு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் ஊராட்சி வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர், மின்சார வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கிராம பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் ஆர் ரகுநாதன், தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

Tags:    

Similar News