திண்டிவனத்தில் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் குறுங்காடு

திண்டிவனத்தில் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் முட்புதர்கள் மண்டி கிடக்கும் குறுங்காட்டை அழிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-06-27 09:40 GMT

புதர் மண்டிகிடக்கும் வளாகம்

திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையிலுள்ள சப்கலெக்டர் அலுவலக வளாகத்தில் அப்துல் கலாம் நினைவு குறுங்காடு உள்ளது. இதற்கான பெயர்ப்பலகையை, கடந்த ஆண்டு மே மாதம் 9 ம் தேதி, அப்போதைய சப்கலெக்டர் கட்டா ரவி தேஜா திறந்து வைத்தார்.

இதையொட்டி அந்தப்பகுதியில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டது. தற்போது அப்துல் கலாம் நினைவு குறுங்காடு பராமரிப்பில்லாமல் புதர் மண்டி கிடக்கின்றது. புதியதாக நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருகின்றது.

குறுங்காடு உள்ள பகுதியில் சப்கலெக்டர் அலுவலகத்தின் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றது.மேலும் குறுங்காடு அமைந்துள்ள பகுதி கால்நடைகள் மேய்ச்சலுக்காக அதிகம் வருகின்றது.சப்கலெக்டர் அலுவலகத்திற்கு தினந்தோறும் அதிக அளவில் பொது மக்கள் வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு குறுங்காடு அமைந்துள்ள பகுதியிலுள்ள புதர்களை அகற்றி, கால்நடைகள் வராமல் தடுத்து, சுகாதாரத்தை பேணிகாப்பதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News