லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை

ரூ. 2 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்தது.

Update: 2024-02-27 09:50 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு சார் பதிவாளராக பணிபுரிந்தவர் தேவராஜ். நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவரான இவர்   தெற்கு குண்டலை சேர்ந்த பொன்னம்பெருமாள்  என்பவரிடம் ஆரல்வாய்மொழி கிராம சர்வே எண் ஒன்றுக்கு வில்லங்க சான்று வாங்க ரூபாய் 2 ஆயிரம்  லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்னம்பெருமாள் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.       

போலீசாரின் ஆலோசனையின் பேரில் 6-  9 -  2012 அன்று இரண்டாயிரத்தை பொன்னம்பருமாள் சார் பதிவாளர் தேவராஜிடம் கொடுத்தார். இதை அப்போதைய லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சார் பதிவாளர்  தேவராஜனை கைது செய்தார்.      பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மற்றும் தனி நீதிபதி ஆர் கோகுலகிருஷ்ணன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். அதில் தேவராஜ்க்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், நான்காயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார்.

Tags:    

Similar News