இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் !

இந்தியா கூட்டணி சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வேட்பாளர் தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 11:52 GMT
சுப்புராயன்
இந்தியா கூட்டணியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் அறிவிக்கப்பட்டிருக்கிறார் இந்நிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் முன்னதாக திருப்பூர் குமரன் நினைவகத்தில் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கிறிஸ்துராஜ்ஜிடம் மனு தாக்கல் செய்தார் வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கும் தேர்தலில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனவும்  எம்பியாக நான்  என்ன செய்தேன் என தெரிவித்தால் ஒரு கோடி தருவதாக எதிர்கட்சியினர் கொடுத்த செய்தியை பார்த்தேன் செய்தி வெளியிட்ட ஊடக ஆசிரியரும் கேள்வி கேட்டவர்களும் என் அலுவலகத்திற்கு ஒரு கோடியுடன் வரட்டும் என் பணியை நிரூபித்து அந்த ஒரு கோடியை அனாதை ஆசிரமங்களுக்கு தர  தயாராக இருக்கிறேன் என்றார்.
Tags:    

Similar News