ரூ.13.88 கோடியில் துணை மின்நிலையம் - முதல்வர் துவக்கி வைப்பு

ஒசூர் அருகே பேகேப்பள்ளியில் ரூ.13.88 கோடியில்கட்டி முடிக்கப்பட்ட துணை மின்நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்.

Update: 2024-02-29 02:07 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளியில் 13.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/ கி.வோ துணை மின்நிலையம் கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காணொளி வாயிலாக துணை மின்நிலையத்தை திறந்து வைத்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு குத்துவிளக்கேற்றி மின் விநியோக பணிகளை துவக்கி வைத்தார்.அப்போது ஒசூர் சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

புதியதாக பேகேப்பள்ளி பகுதியில் 110.கி.வோ. துணை மின்நிலையம் நிறுவியதால் பொதுமக்களுக்கு சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இந்த புதிய மின் நிலையத்தால் 15 ஆயிரத்துக்கு அதிகமான வீட்டு உபயோக மின் இணைப்புகள்,1100 தொழில்சாலைகளுக்கான மின் இணைப்புகள், 220 விவசாய மின் இணைப்புகள்,120 வர்த்தகத்திற்கான மின் இணைப்புகள் என மொத்தம் 16 ஆயிரத்து 440 மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News