திருச்செங்கோட்டில் அடுத்தடுத்து வருமான வரி சோதனை

திருச்செங்கோட்டில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-05-17 03:24 GMT

வருமான வரித்துறையினர் சோதனை

திருச்செங்கோடு அடுத்த எஸ் கே வி கல்வி நிறுவனங்களின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி. திருச்செங்கோடு பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார். இவரது வீட்டில் நேற்று மதியம்  இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.திருச்செங்கோட்டில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களிடம் வருமான வரி சோதனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News