அரசு மருத்துவமனை ஊழியர் திடீர் உயிரிழப்பு !!
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் கம்பவுண்டராக பணிபுரிந்த நபர் உயிரிழந்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-06-01 06:09 GMT
பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்கிற துரைப்பாண்டியன் வயது 37 இவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் கம்பவுண்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி துரைப்பாண்டியன் மருத்துவமனையில் பணி முடிந்து வீட்டிற்கு டூவீலரில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துரை பாண்டியன் தனது நண்பர் ஒருவருடன் பெரம்பலூர் கடைவீதிக்கு வந்தார் அப்போது துரைப்பாண்டியன் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட நண்பர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் துரை பாண்டியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத குடத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.