சிவகாசி அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து

சிவகாசி அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்துக்குள்ளானது.

Update: 2024-06-16 13:52 GMT
சிவகாசி அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி புதூர் சாலை அம்மன் நகர் தனியார் கேஸ் கம்பெனி அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்பு புகை வெளியே வந்தது.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் விபத்து நல் வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது.மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் மின்தடை செய்யப்பட்டது.இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயில் லீக்கேஜ் மற்றும் வெப்பம் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News