கறம்பக்குடியில் இன்று காலை திடீரென மழை !

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இன்று காலை திடீரென மழை. விவசாயிகளுக்கு இந்த மழையினால் ஏதேனும் விவசாயம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Update: 2024-02-24 08:46 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இன்று காலை திடீரென மழை பெய்து இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தபோதிலிலும் தற்பொழுது பருவம் தாண்டி மழை பெய்ததால் விவசாயம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என இன்று அதிகாலை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது அந்த 10 மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டமும் ஒன்றாகும் இந்நிலையில் இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரம்பக்குடியில் திடீரென மழை பெய்தது பொதுவாக வருடா வருடம் இந்த பிப்ரவரி மாதத்தில் அதிகாலையில் பணி செய்வது வழக்கம் ஆனால் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக குளிந்த காற்று வீசியது, திடீரென மழை பெய்தது. இந்த மழையானது கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நீடித்தது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பருவம் தவறி இந்த மழை பெய்ததால் தற்பொழுது விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஒருவித கலக்கத்துடன் உள்ளனர். ஏனென்றால் வருடா வருடம் மழை காலத்தில் அதிக நீர் பாய்ந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது அதேபோல் வெயில் காலத்தில் பயிர்கள் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி-கும் அபாயம் ஏற்பட்டது இந்நிலையில் தற்பொழுது குளிர் காலம் என்பதால் அதற்கு தகுந்தார் போல் விவசாயத்தை செய்து வந்தனர் விவசாயிகளுக்கு இந்த மழையினால் ஏதேனும் விவசாயம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மழையானது கரம்பக்குடி மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமங்களிலும் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News