சங்ககிரி: திடீரென கொட்டி தீர்த்த கனமழை
சங்ககிரி: திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 16:13 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்ககிரி நகர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், குப்பனூர் ,பச்சைக்காடு இரயில் நிலையம், அக்கமாபேட்டை, பனங்காடு,வைகுந்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் அக்கினி வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. திடீரென பெய்த கோடை மழையால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.