கரும்பு அறுவடை துவக்கம்

விருதுநகர் அருகே முருகனேரி கிராமத்தில் கரும்பு அறுவடை துவங்கியுள்ளது.

Update: 2024-01-12 14:18 GMT

விருதுநகர் அருகே முருகனேரி கிராமத்தில் கரும்பு அறுவடை துவங்கியுள்ளது.

தை திருநாளை முன்னிட்டு விருதுநகரில் கரும்பு அறுவடை செய்த விவசாயிகள் நல்ல விளைச்சல் மற்றும் நல்ல விலை போவதால் ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தைப்பொங்கள் கொண்டாத்தின் போதும் பூஜையின் போதும் முக்கிய இடம் வகிப்பது கரும்பு தை திருநாளுக்கு இன்னும் ஒரு சில தினம் மட்டுமே உள்ள நிலையில் விருதுநகர் அருகே உள்ள முருகனேரி கிராமத்தில் கரும்பு பயிர் யிட்ட விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கினார்கள்.

 சித்திரை மாதம் விதைக்கப்பட்டு மார்கழி மாதம் அறுவடை செய்யப்படும் கரும்பு அந்த பகுதியில் இரண்டு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டது அதன் அறுவடை பணி இன்று தொடங்கியது இந்தாண்டு மழையின் காரணமாக கரும்பு நல்ல விளைச்சல் தந்து இருப்பதாகவும் இதனால் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளர்கள் ஒரு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 800 முதல் ஆயிரம் கட்டு கரும்புகள் கிடைப்பதாகவும் இங்கு அறுவடை செய்யப்படும் கரும்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் நாகர்கோவில் தூத்துக்குடி போன்ற பகுதிகளில் விற்பனைக்கு அனுப்படுவதகாவும் இதனால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Tags:    

Similar News