உத்தமபாளையம் அருகே விஷம் அருந்தி தற்கொலை

தேனி மாவட்டம்,கரிச்சிபட்டியில் தொண்டை வலி காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-02-15 02:15 GMT

தொண்டை வலி காரணமாக தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் கரிச்சி பட்டி சேர்ந்தவர் பிரபா. இவரது மகன் சின்னமனூர் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார் இவருக்கு தீராத தொண்டை வலி இருந்து பல இடங்களில் சிகிச்சை எடுத்தும் குணமாக அதனால் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி வலி மிகுதியால் அவர் எலி பேஸ்ட்டில் கூல்ட்ரிங்ஸ் கலந்து குடித்தார். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஓடப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News