புளியங்குடியில் நண்பர் இறந்த சோகத்தில் தற்கொலை
புளியங்குடியில் நண்பர் இறந்த சோகத்தில் செல்லையா என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Update: 2024-04-18 05:43 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி கற்பகவீதியை சேர்ந்த செல்லையா(55) என்பவர் தனது நண்பர் நேற்று கிணற்றில் விழுந்து இறந்த சோகம் தாங்க முடியாமல், இன்று காலை புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்லும் பாதையில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அப்ப பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.