மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த விழா 16ம் தேதி தொடக்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த விழா உற்சவம் வரும் 16ம் தேதி தொடங்கிறது.

Update: 2024-03-01 15:33 GMT

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த விழா உற்சவம் வரும் 16ம் தேதி தொடங்கிறது.



மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த விழா 16ம் தேதி தொடக்கம் துரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த விழா உற்சவம் வரும் 16ம் தேதி தொடங்கிறது என கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பங்குனி மாதத்திற்கான கோடை வசந்த உற்சவம் வரும் 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. மேலும், பங்குனி உத்திர சுவாமி புறப்பாடு, 25ம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு செல்லூர் வைகை வடகரையில் உள்ள திருவாயப்புடையார் கோயிலில் எழுந்தருளுவார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் தீபாரானை நடக்கிறது. மாலை சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அங்கிருந்து கோயிலுக்கு வந்த பின்னர் சுவாமி சன்னதி மண்டபத்தில் பாதபிட்சாடனம் நடந்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

திருவிழா நடைபெறும் நாட்களான 16ம் தேதி இருந்து 25ம் தேதி கோயில் மற்றும் உபயதார்கள் சார்பில் உற்சவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகியவை எதுவும் நடத்தப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News