கோடை மழை : குளிர்ந்தது டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Update: 2024-05-14 08:06 GMT
காலை முதல் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை,காரைக்கால்,நாகப்பட்டிணம்,திருவாரூர் ,தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகி வருகிறது. மழைப்பொழிவின் காரணமாக வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 12 மணி நிலவரப்படி வெப்பநிலை திருவாரூர் 25.3°©, மணல்மேடு 26.2°©, கொள்ளிடம் 26.7°©, மயிலாடுதுறை 27.5°©, வேதாரண்யம் 27.4°© வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அடுத்த 4-5 நாட்களுக்கு தினசரி பரவலாக மழை வாய்ப்பு இருப்பதால் கோடை வெப்பம் குறைந்து காணப்படும்.
Tags:    

Similar News