மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி நிறைவு விழா

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி நிறைவு விழா.

Update: 2024-06-01 08:41 GMT
பெரம்பலூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கல்வி மற்றும் சென்னை பாவை பவுண்டேசன் சார்பில் பெரம்பலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட பெரம்பலூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி மையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி மே 20 ஆம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெற்றது . இதில் மே 31 ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழா நிகழ்சி பெரம்பலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதிலட்சுமி,அருண் ஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் கலந்து கொண்டு சிறப்பு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பயிற்சி நடைபெற்ற நாட்களில் பயிற்சியை பார்வையிட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் பாவை பவுண்டேசன் நிறுவன பணியாளர்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளால் குழந்தைகளிடத்தில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து பெற்றோர்களிடமும் கேட்டறிந்தனர். இதில் கலந்து கொண்ட பெரம்பலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 2 வயது முதல் 10 வயதுடைய 20 சிறப்புக்குழந்தைகளுக்கு கடந்த பத்து நாட்களாக தொழிற்சார் பயிற்சி மற்றும் அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது . மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பாவை பவுண்டேசன் சார்பில் ட்ராயிங் புத்தகம், க்ரையான்ஸ்,கலர் பென்சில் அடங்கிய கிட் பாக்ஸ் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், மெடல் வழங்கி குழந்தைகளை மகிழ்வூட்டினார்கள். சேவை மனப்பான்மையுடன் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கிய சுரேஷ் மற்றும் பாவை பவுண்டேஷன் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியதர்சினி மற்றும் தன்னார்வலர்கள் மணிமேகலை , பிருந்தா, நவீன் ஆகியோர்களுக்கு பெரம்பலூர் சமக்ரசிக்ஷா சார்பில் நினைவு பரிசுடன் பொன்னாடைப் போர்த்தி பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக பெரம்பலூர் வட்டார உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பாவை பவுண்டேசன் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியதர்சினி நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் ஒன்றியம் உள்ளடக்கிய கல்வி வட்டார அளவிலான குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags:    

Similar News