கழிப்பிட வசதி இல்லாத காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லாததால், அங்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-03-02 03:27 GMT
நாகர்கோவில் போலீஸ் எஸ்பி., அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நாகர்கோவில் மணிமேடை பகுதியில் உள்ளது. எஸ் பி அலுவலகம், எஸ் பி தனிப்பிரிவு, சைபர் கிரைம், ஏடிஎஸ்பிக்கள் அலுவலகம், மாவட்ட குற்ற ப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம்,  காவல் கட்டுப்பாட்டு அறை  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அங்கு இயங்கி வருகின்றன.      

 இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் புகார் மனு அளிக்க வருகிறார்கள். அவர்களுக்கு போதிய பார்க்கிங்  வசதி இல்லை. இந்த நிலையில் தற்போது புதன்கிழமை தோறும் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து  புகார்தாரர், எதிர்மனுதாரர் என ஏராளம் பேர் உதவிக்கு வருகிறார்கள்.    

 பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் இளம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களும் உண்டு. காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. எஸ்பி - ஐ சந்தித்து மனு அளிக்க நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கிறார்கள். இவ்வாறு வருவர்களுக்கு போதிய குடிநீர் வசதி, கழிவறை வசதி இல்லை. இதனால் பெண்கள் வயதானவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள்.      அனைவரும்  பயன்படுத்தும் வகையில் ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனி கழிவறை வசதி செய்யப்பட வேண்டும், போதிய அளவில் குடிநீர் வசதியும் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News