மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்,

Update: 2024-02-08 02:33 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரத்தி, அச்சரபாக்கம், எல். எண்டத்தூர், ஜமீன் எண்டத்தூர், நல்லாமூர் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ உபகரணங்களை வழங்கினர் . பின்பு அங்குள்ள நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் . இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜன், அச்சரப்பாக்கம் ஒன்றிய அவைத் தலைவர் சந்திரபாபு, அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன், அச்சரப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் முருகதாஸ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News