சூரசம்ஹார திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-23 17:14 GMT

சூரசம்ஹாரம் 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியமான முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழா,தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்று வருகிறது.மேலும் அம்மன் தினந்தோறும் காமதேனு,பூத வாகனம், ரிஷபம், மயில், குதிரை, யானை உட்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம்இரவு 8-ம் நாள் திருவிழாவில், முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கபட்ட கண்ணாடி தேரில் மாடுகள் பூட்டப்பட்டு நகர் வலம் வந்து கோவிலின் முன்பு சூரசம்ஹாரம் நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்றது.

சூரசம்ஹாரத்தின் போது சூரபத்மன் யானை, அரக்கன், எருமை, ஆடு, குதிரை உள்ளிட்ட 5 தலை கொண்டு அம்மனிடம் போரிடும் நிகழ்ச்சியில், சூரபத்மனை அம்மன் வதம் செய்து சூரசம் ஹாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்தனர்.

Tags:    

Similar News