பௌத்த மதத்தினர் குறித்து கணக்கெடுப்பு - பௌத்த கூட்டமைப்பு கோரிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பில் பௌத்த மதத்தினர் குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என ஆத்தூரில் தென்னிந்திய பௌத்த கூட்டமைப்பின் தலைவர் மவுரியபுத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-06-19 04:53 GMT

மவுரியபுத்தா செய்தியாளர் சந்திப்பு 

சேலம் மாவட்டம்,ஆத்தூரில் தென்னிந்திய பௌத்த கூட்டமைப்பின் தலைவரும் மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினருமான மவுரியபுத்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுசேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வீரகனூர் தியாகனூர் உள்ளிட்ட இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன தியாகனூரில் ஒரே கல்லில் மிகப்பெரிய அளவிலான புத்தர் சிலை உள்ளது மற்றொரு சிலைக்கு தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தை பௌத்த மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் புத்தர் சிலைகளை பாதுகாப்பு செய்து சுற்றுலாத்தலமாக மாற்றம் செய்ய வேண்டும். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவதாக இருந்தாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பௌத்தர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் அவ்வாறு கணக்கெடுப்பு செய்து அரசு சார்ந்த திட்டங்களை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

Tags:    

Similar News