காணை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: துணை இயக்குனர் ஆய்வு

காணை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-15 15:36 GMT

ஆய்வு செய்த துணை இயக்குனர்

விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி, காணை வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உள்ள விதை இருப்பு கிடங்குகளை ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்களை வழங்கிய அவர் தொடர்ந்து அரியூர் கிராமத்துக்கு சென்று அங்கு கடந்த 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சார பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் கதிரி 1812 நிலக்கடலை ஆதார விதை பண்ணையையும், சாமை பயிர் அனுசரணை ஆராய்ச்சி தளையினையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தி, வேளாண்மை அலுவலர் சரவணன், விதை சான்று அலுவலர் சுதா, உதவி விதை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண் அலுவலர் பிரபாகரன், ஆத்மா உதவி தொழில்நுட்ப அலுவலர் சிவானந்தம் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News