பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஊராட்சி செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஊராட்சி செயலாளர் பாரதிதாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் பட்டுக்குடி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 13 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது வினியோக கட்டிடம் மற்றும் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், நாயக்கர் பேட்டை ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டு வருகின்றது.
புதிய வீடு கட்டுமான பணிகளை மாவட்ட ஊராட்சி செயலாளர் பாரதிதாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உள்ளிக்கடை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் பார்வையிட்டார் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் ,கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கப்பன் ஊராட்சி செயலாளர் முருகையன் ஆகியோர் உடன் இருந்தனர்